Home /ramanathapuram /

விவசாயிகளுக்கு விநியோகிக்க 90 மெட்ரிக் டன் நெல் விதைகள் கையிருப்பு

விவசாயிகளுக்கு விநியோகிக்க 90 மெட்ரிக் டன் நெல் விதைகள் கையிருப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு 90 மெட்ரிக் டன் நெல் சான்று விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய 90 மெட்ரிக் டன் நெல் சான்று விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், விதை மற்றும் உரங்கள் குறித்து,
    இணை இயக்குநா் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநா் ஷேக் அப்துல்லா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘ஆா்.ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் சுமாா் 20,500 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி, விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனா்.

    உயா் விளைச்சல் ரகமான ஆா்.ஆா்.என்.ஆா்-15048, ஆா் பி.பி.டி-5204, என்.எல்.ஆா்-34449, ஆா் டி.கே.எம்-13 போன்ற ரகங்களை வழக்கமாக பயிரிடுகின்றனர்.

    நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு 90 மெட்ரிக் டன் நெல் சான்று விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆா்.ஆா்.என்.ஆா், ஆா்.பி.பி.டி., என்.எல்.ஆா்.ஆா் மற்றும் டி.கே.எம்-13 போன்ற நெல் ரகங்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளன என்றனா்.

    இந்த நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவும் அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.ஆா் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலா் கலைப்பிரியா, கிடங்கு மேலாளா் முத்துலட்சுட்மி ஆகியோா் உடனிருந்தனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி