முகப்பு /ராமநாதபுரம் /

“வறட்சி நிவாரணம் வேண்டும்..” ராமநாதபுரத்தில் முழக்கமிட்ட விவசாயிகளால் பரபரப்பு..

“வறட்சி நிவாரணம் வேண்டும்..” ராமநாதபுரத்தில் முழக்கமிட்ட விவசாயிகளால் பரபரப்பு..

X
முழக்கமிட்ட

முழக்கமிட்ட விவசாயிகள்

Ramanathapuram Farmers : ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்காத தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 34,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்தனர். பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும்‌ தண்ணீர் இன்றி காய்ந்து கருகிபோனதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

இதனால் விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்ககோரி பல மாதங்களாக பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காமல் உள்ளது.

முழக்கமிட்ட விவசாயிகள்

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்காத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய தமிழக அரசு நெற்பயிர்கள் கருகியதற்கு வறட்சி நிவாரணம் வழங்காதது ஏன் என் கேள்வி எழுப்பினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram