Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் வைக்கோலுக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை.!

ராமநாதபுரத்தில் வைக்கோலுக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை.!

வைக்கோல்

வைக்கோல்

வைக்கோலுக்கு கடந்த ஆண்டு கிடைத்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை என்று ராமநாதபுரம் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் வைக்கோல் கடந்த ஆண்டு விலையை விட இந்த ஆண்டு குறைவான விலைக்கு விற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. வைக்கோலுக்கும் உரிய விலை வழங்காததால் பாதிப்படைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1.28 லட்சம் ஹெக்டேரில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு ஜனவரியில் மழைவரத்து சாகுபடி செய்யும் அளவிற்கு இல்லை. கடந்த ஆண்டு நல்ல மழை இருந்ததால் அனைத்து கண்மாய்களும் 80% மேல் நிரம்பின.

வைக்கோல்


வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து தற்போதே வயல்வெளிகளை பயிரிட தயார் செய்து வருகின்றனர். கடந்தாண்டு அதிகளவில் மழைப்பொழிவு மற்றும் காவிரி நீர், தேவைக்கு அதிகமாக அணையில் இருந்து திறக்கப்பட்டது.

வைக்கோல்


இதனால் பெரிய கண்மாய் போன்ற நீர் நிலைகளில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் புத்தனேந்தல், உத்திரகோசமங்கை, வன்னிக்குடி ஆகிய பகுதிகளில் நெல்சாகுபடி செய்தனர். இதையடுத்து, தற்போது ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கோல் அறுவடை இயந்திரம் மூலம் வயல்வெளிகளை சுத்தம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

இந்த வைக்கோலானது கடந்த ஆண்டு விற்ற விலையை விட குறைந்த அளவே இந்தாண்டு விற்க்கப்படுகிறது. 70 ரூபாய்க்கு விற்ற வைக்கோல் கட்டு, தற்போது 50 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. நெல்லுக்கு தான் உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது வைக்கோல் கட்டிற்கும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி