Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை அறிமுகம்

ராமநாதபுரத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை அறிமுகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராமநாதபுரத்தில், விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை அறிமுகம் மற்றும் பரிசோதனை செய்யும் முறை காணப்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

    தற்போது, நவீன காலத்திற்கு ஏற்றார் போல், விவசாயம் மாறி வருகின்றது. மேலும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைவாக கிடைத்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான விவசாய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

    தற்போது, குயவன்குடி வேளாண்மை ஆராய்ச்சி பயிற்சி மையத்தில், நடந்த சோதனை நிகழ்ச்சியில் டிரோனை பறக்கவிட்டு உரம் தெளிப்பது செயல்படுத்தி காட்டப்பட்டது.

    குறுகிய காலத்தில் அதிகளவிலான பரப்பளவில் உரம், பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கலாம்
    எனவும், அதன்படி நேரம், பணம் மிச்சமாகும் என்றும் வேளாண்மைத்துத்றை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று சந்தேகங்களைக் கேட்டறிந்தனா். நிகழ்ச்சியில் வேளாண் மைய அதிகாரி ராகவன், துணை இயக்குநர் சேக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி