ஹோம் /ராமநாதபுரம் /

காய்ந்துபோன பயிர்கள்.. தலையில் முக்காடு போட்டு கலெக்டரிடம் நிவாரணம் கோரிய ராமநாதபுரம் விவசாயிகள்..

காய்ந்துபோன பயிர்கள்.. தலையில் முக்காடு போட்டு கலெக்டரிடம் நிவாரணம் கோரிய ராமநாதபுரம் விவசாயிகள்..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் விவசாயிகள்

Ramanathapuram Farmers : ராமநாதபுரம் ஆட்சியரிடம் காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு கோரினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் உரிய இழப்பீடு வழங்கக்கோரி தலையில் துண்டைப் போட்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியப் பகுதியான திருவாடானை தாலுகா, கட்டவிளாகம் பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு நெற்பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்திருந்தனர்.

இந்நிலையில், வருடந்தோறும் பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய பருவமழை இந்த ஆண்டு பெய்யாமல் போனதால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கட்டவிளாகம் பகுதியில் விவசாயம் செய்த நெற்பயிர்கள் முற்றிலும் தண்ணீர் இன்றி துளைவிடும் நேரத்தில் காய்ந்துபோனது.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத தனுஷ்கோடி... ஏன் தெரியுமா?

இதையடுத்து, காய்ந்ததால் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இன்று தலையில் துண்டை போட்டு முக்காடு அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் நெற்பயிர்களை பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு பெற்று தர வேண்டும் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவித்து வறட்சி நிவாரணங்கள் வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Local News, Ramnad