முகப்பு /ராமநாதபுரம் /

திடீரென கடல் உள்வாங்குவது ஏன்? - விவரிக்கும் ராமேஸ்வரம் மீனவர்..

திடீரென கடல் உள்வாங்குவது ஏன்? - விவரிக்கும் ராமேஸ்வரம் மீனவர்..

X
கோடைகாலத்தில்

கோடைகாலத்தில் கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றுதான்... அசால்டாக விளக்கமளித்த ராமேஸ

Sea Water Suddenly Receding : 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது கடல் உள்வாங்கி, பின்னர் கடல் நீர் வெள்ளம் போன்று வந்து மக்களை இழுத்துச் சென்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

கோடை காலத்தில் கடல் உள்வாங்குவது இயல்பான நிகழ்வு தான் என்றும், காற்றின் வேகம் பொருத்து மாறுபாடு மாறுபடுவது வழக்கம். இதனால் மீனவர்கள் அச்சப்படுவது கிடையாது என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதிகளில், கடற்கரை ஓரங்களில் கடந்த சில நாட்களாக காலை பொழுதில் கடல் உள்வாங்கி, மதியம் நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது. இந்நிலையில், கடலானது உள்வாங்குவதால் மீனவர்கள் அச்சம், பொதுமக்கள் அச்சம் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் ஜெரோம் கூறுகையில், “கடலின் காலநிலையை வாடைகாலம், கோடைக்காலம் என்று கூறுகிறது, வாடைகாலத்தில் கடலில் நீர்மட்டம் அதிகரிக்கும். கோடைகாலத்தில் நீர்மட்டம் குறைவாக இருக்கும் இது இயல்புதான். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை கடலில் நீரோட்டம் மாறி மாறி ஓடும். வெளியில் இருந்து பார்க்கும்போது அலை போன்றுதான் தெரியும் ஆனால் கடலில் உள்ள நீரோட்டம் நதியைப்போல 6 மணி நேரம் வலது பக்கமும், 6 மணி நேரம் இடது பக்கமும் ஓடிக்கொண்டு இருக்கும்.

கோடைகாலத்தில் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கும் போதும், காற்று அதிகமாக இருக்கும் போதும், நீரோட்டமானது குறையும் அப்போது கடலானது உள்வாங்கி இருக்கும். இது வழக்கமாக காலம் காலமாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது கடல் உள்வாங்கி, பின்னர் கடல் நீர் வெள்ளம் போன்று வந்து மக்களை இழுத்துச் சென்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனால் பொதுமக்கள் கடல் சாதரணமாக உள்வாங்கினாலும் அச்சப்படுகின்றனர். இது ஒரு சாதாரணமான நிகழ்வுதான் இதனால் பயமும் அச்சமும் அடையத் தேவையில்லை. மேலும், கடல் நீரோட்டம் உள்வாங்கினால் மீனவர்கள் அச்சப்படுகின்றனர் என்று கூறுகின்றனர். அப்படி எந்தவொரு அச்சமும் மீனவர்களிடம் கிடையாது. 6 அடி, 7 அடிக்கு கடல் நீர் பொங்கி எழுந்தாலே அச்சமின்றி மீன்பிடிக்க செல்வோம். கடலைப்பற்றி தெரியாத பொதுமக்கள் தான் அச்சப்படுகின்றனர். மீனவர்கள் அச்சப்படுவதில்லை” என்று கூறினார்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram