முகப்பு /ராமநாதபுரம் /

அதிக வட்டியை நம்பி லட்சக்கணக்கில் பணம் ஏமாந்துவிட்டேன்... ராமநாதபுரம் எஸ்.பியிடம் முன்னாள் கவுன்சிலர் புகார்

அதிக வட்டியை நம்பி லட்சக்கணக்கில் பணம் ஏமாந்துவிட்டேன்... ராமநாதபுரம் எஸ்.பியிடம் முன்னாள் கவுன்சிலர் புகார்

X
எஸ்.பியிடம்

எஸ்.பியிடம் புகார் அளிக்கும் கவுன்சிலர்

ramanathapuram | ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் பணத்தை இழந்து விட்டதாக எஸ்பியிடம் முன்னாள் கவுன்சிலர் சத்தியவாணி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இழந்த பணத்தை பெற்றுதருமாறு கண்ணீர் மல்க கோரிக்கைவிடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தங்கத் துரையின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். இந்நிலையில், மனு அளிக்க வந்த முன்னாள் கவுன்சிலர் சத்தியவாணி அந்த புகாரில் சன்மேக்ஸ் என்ற நிறுவனம் 7,000 ரூபாய் செலுத்தினால் 30 மாதங்களுக்கு தலா 600 ரூபாய் வீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பியதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் கூறியதை நம்பி சத்தியவாணி தன்னுடைய சொந்த பணம் மற்றும் உறவினர்களிடம் வாங்கிய பணம் என‌ 15.36 லட்ச ரூபாய் செலுத்தியதாகவும், செலுத்திய பின்னர் நான்கு மாதங்களுக்கு மட்டும் வட்டி வழங்கப்பட்டதாகவும் அதற்கு பிறகு வட்டி வழங்காமல் ஏமாற்றத் தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து, வட்டி வழங்கப்படாதது குறித்து கேட்டதற்கு, வட்டியை தர மறுத்ததோடு முதலீட்டை திரும்பி தரவில்லை என்றும், பணத்தை கேட்டபோது தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

மேலும், அந்த மோசடி கும்பல் இதுபோல கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி ராமநாதபுரத்தில் அப்பாவி ஏழை எளிய மக்களை ஏமாற்றி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த பணத்தை பெற்று தர வேண்டும் என்று கண்ணீர் மல்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

First published: