ஹோம் /ராமநாதபுரம் /

முந்துங்ககள்... ராமநாதபுரம் மாவட்ட இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

முந்துங்ககள்... ராமநாதபுரம் மாவட்ட இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ramanathapuram district News | ராமநாதபுரத்தில் நாளை (அக்டோபர் 20) டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

முன்னணி தொழில் குழுமமான டாடாவின் புதிய நிறுவனம் ஓசூரில் செயல்பட்டு வருகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற இந்நிறுவனத்திற்கு பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (வியாழக்கிழமை) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகில் உள்ள முகம்மது சதக் தஸ்தஹிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் 2021-22ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் உயரம் 145 செ.மீ., எடை குறைந்தபட்சமாக 43 கிலோ முதல் 65 கிலோ வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

இதில் தேர்வு செய்யப்படும் பெண் களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.16,000 மாத சம்பளமாக வழங்கப் படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகிய வசதிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் பொது சேம நல நிதி (PF), மருத்துவக் காப்பீடு மற்றும் மேற்படிப்புக்கான வசதிகள் செய்து தரப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதவிமூப்பு எந்த விதத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Employment, Job Fair, Local News, Ramanathapuram