இரண்டு வீடுகளுக்கு நடுவே வைக்கப்பட்ட மின்கம்பத்திலிருந்து வீட்டிற்கு மேல் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மின்சாரம் பாய்ந்ததில் நான்கிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் உயிர் பயத்தில் வாழ்வதாகவும், பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கை இல்லை என வீரபத்திரசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் வீரபத்திரசுவாமி கோவில் தெருவில் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு மேல் ஆபத்தான முறையில் தாழ்வாக தொங்கியபடி மின்கம்பிகள் செல்கின்றன.
இரண்டு வீட்டிற்கு நடுவில் உள்ள மின்கம்பங்களில் இணைக்கப்பட்ட மின்கம்பிகள் வீடுகளின் மேல் செல்வதால் இதுவரைக்கும் நான்கு நபர்கள் மின்சாரம் பாய்ந்தது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10-த்திற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மின்கம்பிகள் வீட்டிற்கு மேல் செல்வதவதால் வீட்டிற்கு மேல் வேலை செய்தவர்கள், கேபிள் வேலை பார்க்க வந்தவர்கள், துணிகளை காயவைத்துப் போது தெரியாமல் பட்டு என சிலர் இறந்தும், சிலர் படுகாயங்களுடன் தப்பி உள்ளனர்.
வீடுகளை பராமரிக்ககூட முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைகின்றனர். வீட்டில் உள்ள குழந்தைகள் தெரியாமல் கூட கைவைத்து விட்டால் உயிர் பலியாகிவிடும். மழை பெய்யும் பொழுது மின்கம்பத்தில் தீப்பொறிகளும் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
வீட்டிற்கு மேல் செல்லும் மின்கம்பிகளை சாலை ஓரத்தில் இருக்கும் மின்கம்பத்தில் மாற்றி உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், மிின்வாரியத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர்.
ராமநாதபுரம் : விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்
இதுகுறித்து, ராமேஸ்வரம் மின்வாரியம் உதவி பொறியாளரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு முறை வந்து மனு அளித்தால், மனுவை பார்த்து விட்டு அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு மின்சாரவாரியத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram