Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19ல் கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19ல் கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

RAMANATHAPURAM : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். அதன்படி மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என இந்தக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்திருந்தார். அதன்படி, எட்டு மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் ஐ.டி.ஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- இறுதிநாள் என்ன?


அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செப்படம்பர் 19ஆம் தேதி காலை 10:30 மணியளவில் மாநில கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில், ஆர்வமுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஓய்வு ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி