ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் தொடர் விடுமுறையால் குவியும் சுற்றுலா பயணிகள்.. போக்குவரத்து நெரிசலால் திணறல்

ராமேஸ்வரத்தில் தொடர் விடுமுறையால் குவியும் சுற்றுலா பயணிகள்.. போக்குவரத்து நெரிசலால் திணறல்

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Holidays Tourists Visits Rameswaram : ராமேஸ்வரத்தில் அரையாண்டு தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

அரையாண்டு தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விட்டதில் இருந்து தினமும் அதிகாலையில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத தனுஷ்கோடி... ஏன் தெரியுமா?

இதையடுத்து, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

மேலும், ராமநாதசுவாமி திருக்கோவில் மேற்கு கோபுரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உள்ளூர் பொதுமக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

போதிய அளவு காவல்துறையினர் இல்லாததால் அவசரத்திற்கு வாகனம் செல்லும்போது மேலவாசல், திட்டக்குடி, பொந்தம்புளி ஆகிய பகுதிகளை கடந்து செல்ல ஒருமணி நேரம் வரை ஆகிறது. அதனால், பள்ளிகள் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் குறுகிய சாலை பகுதியான பழைய போலிஸ் லைன், நடுத்தெரு, மேலவாசல் ஆகிய பகுதிகளை ஒரு வழிப்பாதையாக மாற்றவும், காவல்துறையினர் பற்றாக்குறையால் போதிய காவல்துறையினரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram