முகப்பு /ராமநாதபுரம் /

திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயிலில் இரட்டை கருடசேவை - பட்டாபிஷேக ராமர் கருடவாகனத்தில் காட்சி

திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயிலில் இரட்டை கருடசேவை - பட்டாபிஷேக ராமர் கருடவாகனத்தில் காட்சி

X
திருப்புல்லாணி

திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை யொட்டி பட்டாபிஷேக ராமர் கருடவாகனத்தில் காட்சி அளித்தார்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பட்டாபிஷேக ராமர் கருட வாகனத்தில் காட்சி அளித்து, இரட்டை கருடசேவையானது விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமர் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிறப்பு திருமஞ்சனம் இரட்டைக் கருட சேவையானது நடைபெற்றது. இதில் கோயிலில் இருந்து பட்டாபிஷேக ராமர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, ஆலய வளாகத்தில் பெருமாள் பட்டாபிஷேக ராமர் இரட்டைக் கருட சேவையானது நாலாயிர திவ்யபிரபந்தம் பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பின் பள்ளி மாணவிகளின் மாலை மாற்றுதல் நடன நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    First published:

    Tags: Local News, Ramanathapuram