ஹோம் /ராமநாதபுரம் /

கும்மி நடனமிட்டு சமத்துவ பொங்கல்.. பரமகுடியில் மருத்துவர், செவிலியர்கள் இணைந்து கொண்டாட்டம்..

கும்மி நடனமிட்டு சமத்துவ பொங்கல்.. பரமகுடியில் மருத்துவர், செவிலியர்கள் இணைந்து கொண்டாட்டம்..

X
பரமகுடி

பரமகுடி

Paramakudi Primary Health Center : பரமகுடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாரம்பரியமிக்க கும்மி நடனமிட்டு சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர் பணிச் சுமையில் இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாட முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, பொங்கல் பண்டிகை கொண்டாட அனைவரும் ஒரே மாதிரியாக சேலை அணிந்து, இரண்டு அடுப்பில் புது பானை வைத்து மஞ்சள் கொத்துக்கள் கட்டி, பனங்கிழங்கு, கரும்புகள் வைத்து பொங்கல் பொங்கி வரும் போது குலவையிட்டு, பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Ramanathapuram