ஹோம் /ராமநாதபுரம் /

சீதையை மீட்க ராமர் திட்டம் தீட்டிய ஏகாந்த ராமர் கோவில் வரலாறு தெரியுமா?

சீதையை மீட்க ராமர் திட்டம் தீட்டிய ஏகாந்த ராமர் கோவில் வரலாறு தெரியுமா?

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் - ஏகாந்த ராமர் கோவில்

Rameshwaram Ekantha Ramar Temple : சீதையை  இராவணனிடம் இருந்து மீட்க ராமர் தனது படைகளுடன் திட்டம் தீட்டிய இடம்தான் ராமேஸ்வரத்தில் உள்ள இந்த ஏகாந்தராமர் கோவில், இந்த கோவில் பற்றிய மேலும் கூடுதல் சிறப்புகளை பற்றி காண்போம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராமாயண வரலாறு, சிறப்புகள் நாம் அறிந்தவையே. அந்த ராமாயண வரலாற்றில் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்ற பிறகு ராமர் தனது வானரப் படைகளுடன் சீதையை இலங்கையில் இருந்து எவ்வாறு மீட்பது? இலங்கைக்கு எப்படி செல்வது? என்று திட்டம் தீட்டிய இடம் தான் இந்த ஏகாந்த ராமர் கோவில் ஸ்தலம்.

இந்த ஆலயமானது ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து பாம்பன் செல்லும் வழியில் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகில் தங்கச்சிமடம் செல்லும் முன்பு இடது பக்கம் உள்ளது.

ஆலயத்தின் மூலவராக ராமன் நின்ற படி காட்சி அளிக்கிறார். ராமர் தனது கையில் வில்லுடன் இருப்பது போன்று தான் அனைத்து கோவில்களிலும் பார்க்க முடியும், ஆனால் இங்கு ராமர் மற்றும் இலட்சுமணர் கையில் வில்லானது இருக்காது.

ஏகாந்த ராமர் கோவில், ராமேஸ்வரம்

ஏகாந்தமாக இருந்து ஆலோசனை செய்ததால் வில் அம்பு இல்லாமல் காட்சி அளிக்கிறார்.  அனுமானுக்கும் கையில் கதா ஆயுதமும் கிடையாது. அமைதியாக இருந்து ஆலோசனை செய்ததால் ஏகாந்த ராமர் கோவில் என்று பெயர் பெற்றது இக்கோவில்.

ஏகாந்த ராமர் கோவில், ராமேஸ்வரம்

அமிர்தவாபி தீர்த்தம்:

இங்கிருக்கும் அமிர்தவாபி தீர்த்தமானது, வானர வீரர்கள் போரிடும் போது ஏற்படக்கூடிய காயங்கள் விரைவில் குணமடைவதற்கும் நீண்ட ஆயுள் கொடுப்பதற்கும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமிர்தவாபி தீர்த்தம்

இங்கு ஸ்ரீ ராமநவமி சீதா கல்யாணம் உற்சவம் திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறும். மேலும், பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். தினமும் காலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கோவிலானது காலை 5 மணிமுதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். 098432 72170 என்ற எண்ணில் கோவிலின் வழிபாடு குறித்த தகவல்களை கேட்டுப்பெறலாம்..

ஏகாந்த ராமர் கோவில், ராமேஸ்வரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Ekantha Ramar Temple Map
ராமேஸ்வரம் ஏகாந்த ராமர் கோவில்

First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram