ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ராமேஸ்வரம் கோவில்

ராமேஸ்வரம் கோவில்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள, ராமநாத சுவாமி கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடினால் பல்வேறு நன்மை கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தீர்த்தங்களின் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்த ராமநாத சுவாமி கோவில். இந்த கோவில் புனித தலமாகவும்,  சிறப்பு வாய்ந்த கோவிலாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

  இலங்கையில் ராவணனைக் கொன்று தனது மனைவி சீதாவை மீட்டு வந்த ராமன். ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக, இங்கே மணலால் ஆன லிங்கத்தை உருவாக்கி ராமன் வழிபாடு செய்தார் என்றும் எனவே ராமன் ஈஸ்வரனை வணங்கியதால் இந்த இடம் ராமேஸ்வரம் என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

  இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் கடற்கரையில், அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  வட இந்தியாவில், காசியில் உள்ள கங்கையில் குளித்து விட்டு, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுவதைப்போல், ராமேஸ்வரத்தில் உள்ள இந்த 22 தீர்த்தங்களில் நீராடினால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வட இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நீராடி செல்கின்றனர்.

  ரமேஸ்வரம் கோவில் தீர்த்தம்

  ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களின் சிறப்புகளாக போற்றப்படுபவை குறித்து காணலாம்.

  1. மகா லட்சுமி தீர்தம் – செல்வ வளம் கிடைக்கும்.

  2. சாவித்திரி தீர்தம் – பேச்சு திறன் வளரும்.

  3. காயத்ரி தீர்தம் – உலக நன்மை ஏற்படும்.

  4. சரஸ்வதி தீர்தம் – கல்வி உயரும்

  5. சங்கு தீர்தம் – சுக போக வசதி வாழ்வு தரும்.

  6. சக்கர தீர்தம்– மன உறுதி கிடைக்கும்.

  7. சேது மாதவ தீர்தம் – தடை பட்ட பணிகளில் வெற்றி கிடைக்கும்.

  8. நள தீர்தம் – தடைகள் நீங்கும்9. நீல தீர்தம் – எதிரிகள் நீங்குவர்.

  10. கவய தீர்தம் – பகை மறை யும்

  அக்னி தீர்த்தம் (கடல்)

  11. கவாட்ச தீர்தம்– கவலை தீரும்

  12. கந்தமாதன தீர்தம்– உங்கள் துறையில் வல்லுநர் ஆகலாம்.

  13. பிரமஹத்தி தீர்தம் – பிரமஹத்தி தோஷம் தீரும்.

  14. கங்கா தீர்தம்– பாவங்கள் பொடிபடும்

  15. யமுனை தீர்தம்– பதவி சேரும்

  Must Read : செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

  16. கயா தீர்தம்– முன்னோர் ஆசி கிடைக்கும்.

  17. சர்வர் தீர்தம் – முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்

  18. சிவ தீர்தம் – சகல பிணிகளும் தீரும்

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  19. சத்யா மிர்தர் தீர்தம் – ஆயுள் விருத்தியாகும்.

  20. சந்திர தீர்தம் – கலை ஆர்வம் அதிகரிக்கும்

  21. சூரிய தீர்தம் – தலைமைப் பண்பு, முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

  22. கோடி தீர்தம் – முக்தி கிடைக்கும்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Ramanathapuram, Temple