முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

Rameswaram Ramanathaswamy Temple : ராமேஸ்வரம் ராமநாசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணியானது நிறைவு பெற்றநிலையில், அது குறித்த விவரம் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகி வருவதால் இங்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுவாமி தரிசனம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணும் பணியானது கோவிலின் கிழக்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அதன்படி, ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இந்து அறநிலையத்துறை கீழ் உள்ள அனைத்து இதர கோவில்களில் இருந்தும் பெறப்பட்ட காணிக்கைகள் கோவில் பணியாளர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பணியில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள், வெளிமாவட்ட தன்னார்வலர்கள், திருக்கோவில் ஊழியர்கள் அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி உண்டியல் பணத்தை எண்ணும் பணியை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, உண்டியல் காணிக்கையானது எண்ணப்பட்டதில் 1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 154 ரூபாய் (1.74 கோடி ரூபாய்) பணமும், 34.2 கிராம் தங்கமும், 3.550 கிலோ வெள்ளியும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram