ஹோம் /ராமநாதபுரம் /

திமுக நகர மன்ற உறுப்பினரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்... பரமக்குடியில் பரபரப்பு சம்பவம்...

திமுக நகர மன்ற உறுப்பினரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்... பரமக்குடியில் பரபரப்பு சம்பவம்...

பரமக்குடியில்

பரமக்குடியில் திமுக நகர மன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து

Ramanthapuram | ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக நகர மன்ற உறுப்பினருக்கு கத்தியால் குத்திய‌ மர்மநபர்கள், சிகிச்சைக்காக அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக நகர் மன்ற உறுப்பினரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிகிச்சைக்காக அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக உள்ளவர் பாக்யராஜ். இவர் இன்று பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகர மன்ற உறுப்பினர் பாக்யராஜை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரது வயிற்று பகுதியில் அக்கும்பல் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியது.

இதையும் படிங்க : ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா? -  ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து, காயமடைந்த பாக்யராஜ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சி நகர்மன்ற உறுப்பினரையே மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரமக்குடி பகுதி மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram