ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் மாவட்ட அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரை - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ராமநாதபுரத்தில் மாவட்ட அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரை - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் நவம்பர் மாதத்தில் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்கும் மாணவர்கள் கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். இதற்கு எவ்வாறு  ஆய்வு கட்டுக்கரைகளையும் வழங்கலாம் என்றும் பார்க்கலாம். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் நவம்பர் மாதத்தில் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்கும் மாணவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். இதற்கு எவ்வாறு ஆய்வு கட்டுக்கரைகளையும் வழங்கலாம் என்றும் பார்க்கலாம்.

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. இதில் 10 முதல் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை ஆய்வு கட்டுரையாக சமர்ப்பிக்கலாம்.

இந்த ஆண்டு மைய கருப்பொருளாக ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் துணை தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வு கட்டுரையை சமர்பிக்கலாம்.

இதையும் படிங்க : முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடியின் சகோதரர்

ஜூனியர் (11-13 வயது), சீனியர் (14-17 வயது) பிரிவுகளில் ஒவ்வொரு மாணவருக்கும் இளம் விஞ்ஞானி எனவும், வழிகாட்டும் ஆசிரியருக்கும் சிறந்த வழிகாட்டி ஆசிரியர் என்ற சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் பெற்றோர், தன்னார்வலர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை எழுத கூறலாம்.

விருப்பமுள்ளவர்கள் tnsf.co.in என்ற இணையதள முகவரியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்கள் அறிய 9843379338, 95241 56006, 9487376458 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம், என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் காந்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு விரும்பும் மாணவர்கள் தங்களுடைய முழு விவரங்களையும் தெரிவித்து கொள்ளவேண்டும். எந்த பிரிவுகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பங்கேற்கும் தேதிகள் குறித்தும் பின்னர் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram