முகப்பு /ராமநாதபுரம் /

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

X
மாவட்ட

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

Paramakudi Swmming competition | பரமக்குடியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

பரமக்குடியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கைப்பந்து, கால்பந்து, கபடி, நீச்சல், சிலம்பம், ஓட்டப்போட்டி என 53 வகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பரமக்குடி அருகே தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பேக் ஸ்டோக்ஸ், ப்ரீ ஸ்டைல், பட்டர்ஃபிளை, போன்ற பிரிவுகளில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய பிரிவுகளில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது, இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Swimming Trainer