ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | மாவட்ட அளவிலான செஸ் போட்டி; 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் | மாவட்ட அளவிலான செஸ் போட்டி; 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

X
செஸ்

செஸ் போட்டியில் சிறுவர்கள்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் செஸ் அசோசியேஷன் சார்பில் தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 300-பள்ளிகளைச் சேர்ந்த 1000-திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் வாணி பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000-திற்கும் மேற்பட்ட6-வயது முதல் 14-வயது வரை மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர், 7, 9, 11, 13, 15 என வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு தங்களது திறமைகளை மாணவ, மாணவிகள் வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

74-வது குடியரசு தினம்- பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான செஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram