முகப்பு /ராமநாதபுரம் /

ஜிஎஸ்டியில் பதிவில் எழுத்துப் பிழைக்கு அபராதம் விதிப்பதை தடைவிதிக்க வேண்டி பரமக்குடி விநியோகஸ்தர்கள் மனு

ஜிஎஸ்டியில் பதிவில் எழுத்துப் பிழைக்கு அபராதம் விதிப்பதை தடைவிதிக்க வேண்டி பரமக்குடி விநியோகஸ்தர்கள் மனு

X
ஜிஎஸ்டியில்

ஜிஎஸ்டியில் பதிவில் எழுத்துப் பிழைக்கு அபராதம் விதிப்பதை தடைவிதிக்க விநியோகஸ்தர்

Ramanathapuram News | 60-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு அதிகாரியிடம் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் ஜிஎஸ்டி பதிவு செய்யும்போது கணினியில் அதிகாரிகள் செய்யும் எழுத்துப்பிழைக்கு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் நலசங்க கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனங்களிடம் அத்தியாவசிய பொருட்களை இருந்து வாங்கி சில்லறை வணிகர்கள் மூலம் மக்களுக்கு சென்றடையும் பணியை செய்து வருகின்றனர். மேலும் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு முறையாக ஒவ்வொரு மாதமும் வரும் ஜி.எஸ்.டி வரி பணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய சூழலில் ஜிஎஸ்டியில் உள்ள மாற்றங்களை குறித்து விநியோகஸ்தருக்கு முழுமையாக தெரியாததால், இவற்றை குறித்து தெளிவுபடுத்தும் விதமாக விநியோகஸ்தர்களுக்கு விளக்க வகுப்புகள் எடுக்க வேண்டும்.

மேலும், ஜிஎஸ்டி பதிவு செய்யும்போது எழுத்துப்பிழை மற்றும் கணினி கோளாறு காரணமாக ஏற்படும் சில தவறுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் நடக்கும் இந்த தவறுகளுக்கு விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால் மன உளைச்சல் ஆளாகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவற்றை தவிர்க்கும் பொருட்டு ஜிஎஸ்டி பதிவில் எழுத்துப் பிழை காரணமாக ஏற்படும் தவறுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என பரமக்குடி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் பரமக்குடி வணிகவரி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு அதிகாரியிடம் மனு அளித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram