Home /ramanathapuram /

ராமநாதபுரம்: 50 சதவீத மானியத்தில் 70 நாளில் மகசூல் தரும் பாரம்பரிய விதைநெல் விநியோகம்

ராமநாதபுரம்: 50 சதவீத மானியத்தில் 70 நாளில் மகசூல் தரும் பாரம்பரிய விதைநெல் விநியோகம்

50 சதவீத மானியத்தில் 70 நாளில் மகசூல் தரும் பாரம்பரிய விதைநெல்

50 சதவீத மானியத்தில் 70 நாளில் மகசூல் தரும் பாரம்பரிய விதைநெல்

Ramanathapuram | ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் 70 நாட்களில் மகசூல் தரக்கூடிய ‘அறுபதாங் குறுவை’ விதைநெல் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்றுடன் வாழ்ந்து மறைந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள்தான் என்று வலியுறுத்தி வந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் பாரம்பரிய விதை ரகங்களை அடையாளம் கண்டு சேமித்து வந்தார்.

    இவர் சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கருப்புகவுனி, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாங் குறுவை உள்ளிட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். இந்நிலையில், நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தை வேளாண்துறை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, ராமநாதபுரம் வேளாண், உழவர் நலத்துறை மூலம் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல் ஜெயராமனின் மரபு சார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    Also Read : தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கைத் தமிழர்கள்

    இந்த திட்டத்தின் கீழ் 65 முதல் 70 நாட்களில் மகசூல் தரக்கூடிய 'அறுபதாங் குறுவை' நெல்விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது. இந்த விதை நெல்லானது வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    பாரம்பரிய நெல்சாகுபடியை ஊக்கப்படுத்த இந்த நெல் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் நில ஆவணங்களுடன் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி