முகப்பு /ராமநாதபுரம் /

கமுதியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளி இளைஞர்..

கமுதியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளி இளைஞர்..

X
மினி

மினி மாரத்தான் போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளி இளைஞர்

Mini Marathon | ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கமுதியில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மத நல்லிணக்க மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கமுதியில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மத நல்லிணக்க மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 15 வயதில் இருந்து 50 வயது வரை ஆண்கள் பங்கேற்று மாரத்தான் ஓட்டம் ஓடினர். இந்த மாரத்தான் போட்டியில் 500க்கும்‌ மேற்பட்ட கமுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்டனர்.

அதிகாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியானது கமுதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி 10 கிலோ மீட்டர் தொலைவு இலக்காக கொண்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்புகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் பங்கேற்று வீல் சக்கர வண்டியில் குறிப்பிட்ட இலக்கை எட்டினார். இந்நிலையில், அவரின் மன வலிமையை போற்றிடும் வகையில் பரிசு பொருள் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram