ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | வெளிநாட்டில் பணிசெய்யும் தொழிலாளர்கள் நலன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்- அமைச்சர் பங்கேற்பு

Ramanathapuram | வெளிநாட்டில் பணிசெய்யும் தொழிலாளர்கள் நலன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்- அமைச்சர் பங்கேற்பு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரத்தில் வெளிநாட்டில் பணி செய்யும் தமிழர்கள் நலன் அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வேலை பணியாளர்கள் அறக்கட்டளை சார்பில் வெளிநாடு சென்று வேலை செய்வோருக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலவாழ்வு ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைத் தேடி செல்லும் தமிழர்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள், அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வேலை செய்ய பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் உறுதிசெய்யப்பட்ட பின்னரே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

விழிப்புணர்வு முகாம்

அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் சார்பில் வாரியம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கு இந்த மாவட்டத்தில் முக்கியத்துவம் அளிக்க முயற்சி எடுப்பேன் என்று மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளிநாடு வாழ் தமிழர் நல்வாழ்வு ஆணையாளர் ஜெஸிந்தா லாசரஸ், ‘வேலை தேடி புலம்பெரும் தமிழர்களுக்கு அனைத்து உதவிகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கும், தகுதிக்கேற்ப வேலையும் ஊதியம் வழங்க ஏதுவாக இந்த வாரியம் அமையும் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை இடம்பெயர்ந்த தமிழர் நலவாழ்வு ஆணையாளர் ஜெசிந்தாலாசரஸ் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். ஆலோசனை கூடத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தனது கோரிக்கை மனுவினை ஆணையாளரிடம் அளித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram