கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் தீவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளுக்கு நாள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. மிகப்பெரிய வணிக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் முற்றிலும் அழிந்தது. புயலில் எஞ்சியவற்றை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள், உள்ளூர் மக்கள் என அதிக அளவில் மக்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அற்ற இடமாக தனுஷ்கோடி உள்ளது.
கடும் கத்தரி வெயிலும், சுற்றி கடல்மண் மற்றும் கடல் நீரும் தான் உள்ளது. நிழலில் நிற்க நிழற்குடைகள் கூட இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி கடைகளில் குடிநீர் வாங்கி பருக வேண்டியதாக உள்ளது. மொபைல் டாய்லட்டாவது வைக்க வேண்டும் என்கிறனர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள்.
சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி வான்மதி கூறியதாவது:-
சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தோம் இங்கு இருக்கும் இடங்கள் பார்பதற்கு அழகாக உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களும், மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவ்வாறு இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடத்தில் குடிதண்ணீர் வசதிகள் கூட இல்லை. பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் கூட இல்லை.
அவசரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூட முடியவில்லை. டிஜிட்டல் ரீதியாக செல்லும் இந்த நாட்டில் தனுஷ்கோடியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கினால் கூட கூகுள் பே, போன்பே மூலம் பணம் அனுப்ப முடியவில்லை.
மக்கள் வாழ தகுதி அற்ற இடமாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அடிப்படை வசதிகள் செய்தி கொடுங்கள் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் மொபைல் டாய்லட் வசதியாவது ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.