முகப்பு /Ramanathapuram /

Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...

Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...

X
தனுஷ்கோடி

தனுஷ்கோடி

Dhanushkodi : தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவியலாக கிடக்கின்றன. கழிவுகள் கடலுக்குள் செல்வதால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்திட நேரிடும், கட்டணம் மட்டும் வசூல் செய்து பெயரளவுக்கு சுற்றுலா பயணிகளிடம் ஆய்வு செய்யும் வனத்துறையினர்..

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ராமேஸ்வரம் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோரும் வருகை தருகின்றனர். ராமேஸ்வரம் அருகில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்க கூடிய தனுஷ்கோடி கடற்கரை பகுதியின் அழகை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்,

இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் நீண்ட தூரம் கடற்கரை பகுதியாக இருப்பதால் இந்தப் பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உறவினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், கடலில் குளித்தும் மகிழ்ந்து அழகை ரசித்து வருகின்றனர்.

இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்..

இந்த நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள், உள்ளிட்ட உணவுப் பொட்டலங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு வந்து இங்கு சாப்பிட்டுவிட்டு அந்த பிளாஸ்டிக் கழிவுகளை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் விட்டுச் செல்கின்றனர், இதனால் இந்த பிளாஸ்டிக் ஆனது கடலில் கலந்து விடுகின்றன,

பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடலில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் உயிர் இழந்து வருகிறது ,

பிளாஸ்டிக் குப்பைகள்..

கடந்த வருடங்களில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதையும் நாம் பார்த்து வருகிறோம், இந்த சூழலில் கடல் வளம், வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டும், வனத்துறை சார்பில் தனுஷ்கொடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகள் அமைத்து தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் பாலித்தின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்பு அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளின் வானங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கும் விதமாக இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் , அதேபோல நான்கு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என வசூலிக்க தொடங்கினர்.

இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்..

top videos

    இந்த வசூல் தொடங்கிய நாள் முதல் தனுஸ்கோடி வரும் சுற்றுலா பயணிகளிடம் எந்த நோக்கத்திற்காக சுங்கச் சாவடி அமைத்ததோ அதை விட்டுவிட்டு தற்போது கட்டணங்கள் வசூலிப்பதில் மட்டுமே வனத் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு வனத்துறை சார்பில் எந்த நோக்கத்திற்காக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதோ அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Plastic pollution, Ramanathapuram, Rameshwaram