ஹோம் /ராமநாதபுரம் /

யார் தலையில் விழுமோ...! அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.. தனுஷ்கோடியில் அவலம் - கவனிக்குமா நெடுஞ்சாலைத்துறை?

யார் தலையில் விழுமோ...! அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.. தனுஷ்கோடியில் அவலம் - கவனிக்குமா நெடுஞ்சாலைத்துறை?

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

Ramanathapuram Latest News | ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஓவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் செல்ல நகர் பகுதி முழுவதும்  நெடுஞ்சாலை துறையினர் சார்பில் வழிகாட்டி பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள இரண்டு வழிகாட்டி பலகைகள் உப்பு காற்றினால் அரிப்பு ஏற்பட்டு உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை ஓட்டிச் செல்வதாக உள்ளது.

ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஓவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் செல்ல நகர் பகுதி முழுவதும்  நெடுஞ்சாலை துறையினர் சார்பில் வழிகாட்டி பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:  தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

இந்நிலையில், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள முகுந்தராயர் சத்திரத்திலும், தனுஷ்கோடி அருகில் உள்ள இரண்டு வழிகாட்டி பலகைகளிலும் உடைந்து விழும் நிலையில் தலைக்கு மேலே தொங்கி கொண்டு உள்ளது.

ஆபத்தான நிலையில் வழிகாட்டி பலகைகள்

தனுஷ்கோடி கடல் பகுதியானது மிகவும் வேகமாக காற்று வீசக்கூடிய இடம், இந்நிலையில் காற்று வேகமாக காற்று வீசினால் பலகை முழுவதும் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்படுவத்த நேரிடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் ஆபத்தான முறையில் தொங்கும் வழிகாட்டி பலகையை சரிசெய்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள்  வலியுறுத்துகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram