ஹோம் /ராமநாதபுரம் /

கோரப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடி மீனவர்கள் மலர்தூவி மரியாதை

கோரப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடி மீனவர்கள் மலர்தூவி மரியாதை

X
புயலில்

புயலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை

Dhanushkodi Cyclone : தனுஷ்கோடி கோரப்புயலில் உயிரிழந்தவர்களுக்கு சேதமடைந்த தேவாலயம் உள்ள கடற்கரையில் மீனவ கிராமமக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட கோரப்புயலில் தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடியில் அங்கு வாழ்ந்து வந்த மீனவர்கள், சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் புயலில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, பிள்ளையார் கோவில், தேவாலயம், துறைமுகம், ரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், மருத்துவமனை அனைத்தும் புயலில் கடலோடு சென்றது.

இந்நிலையில், புயலில் சிக்கி இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், 58 ஆண்டுகள் கடந்த நிலையில் தனுஷ்கோடி மீனவ மக்கள், ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் என நூறுக்கும் மேற்பட்டோர் தேவாலயம் பின்னால் உள்ள கடலில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க : பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

இதையடுத்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட படையல்களை கடலில் விட்டு வணங்கினர். தனுஷ்கோடி மீனவர்கள் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram