முகப்பு /ராமநாதபுரம் /

புல்வாமா தாக்குதல் நினைவு நாள்.. மரக்கன்றுகளை நினைவாக வழங்கிய தேவிபட்டினம் இளைஞர்கள்!

புல்வாமா தாக்குதல் நினைவு நாள்.. மரக்கன்றுகளை நினைவாக வழங்கிய தேவிபட்டினம் இளைஞர்கள்!

X
மரக்கன்றுகளை

மரக்கன்றுகளை வழங்கிய இளைஞர்கள்

2019 Pulwama Attack | ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த 2 இளைஞர்கள், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களின் நினைவை மரியாதை செலுத்தும் தினமாக கொண்டாட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மரங்கன்றுகள் வழங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Devipattinam

தேவிபட்டினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று 40 மரக்கன்றுகளை 40 வீரர்கள் நினைவாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த ஹபிஸ் ரஹ்மான் மற்றும் வினோத்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் இணைந்து புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களின் நினைவை மரியாதை செலுத்தும் தினமாக கொண்டாட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மரங்கன்றுகள் வழங்கினர்.

பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது, இதற்கு பதிலாக இந்திய நாட்டை காப்பதற்காக புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த தினமான இளைஞர்கள் அனைவரும் அவர்களின் நினைவை போற்றும் தினமாக கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேவிபட்டினத்தில்‌ இருந்து மரக்கன்றுகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

தேவிபட்டினத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு சுமார் 30-கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து 40-மரக்கன்றுகளை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இந்த செயலை கண்டு மாவட்ட ஆட்சியர் இரண்டு இளைஞர்களையும் பாராட்டினார்.

First published:

Tags: Local News, Pulwama Attack, Ramanathapuram