முகப்பு /ராமநாதபுரம் /

கார்ல் மார்க்ஸ் பற்றி அவதூறு.. ஆளுநரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

கார்ல் மார்க்ஸ் பற்றி அவதூறு.. ஆளுநரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

X
இந்திய

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Ramanathapuram protest | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ல் மார்க்ஸ் பற்றி அவதூரு கருத்துக்களை பதிவு செய்து வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களாக பல்வேறு முரன்பட்ட கருத்துக்களை பதிவு செய்து வருவதை தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கடந்த வாரம் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்ல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காரல் மார்க்ஸ் பற்றி அவதூரு கருத்துகளை பதிவு செய்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர் ஆர்பாட்டமானது நடைபெற்றது, இதில் அக்கட்சியினைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Protest, Ramanathapuram