Home /ramanathapuram /

Ramanathapuram : ஆழ்கடலில் பறைகளுக்கிடையே வாழும் முரல் வகை மீன்களின் சிறப்புகள் என்னென்ன?

Ramanathapuram : ஆழ்கடலில் பறைகளுக்கிடையே வாழும் முரல் வகை மீன்களின் சிறப்புகள் என்னென்ன?

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - முரல் மீன்கள்

Ramanathapuram District : பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் அதிக அளவில்  முரல் வகை மீன்கள் சிக்குவதாக தெரிவிக்கின்றனர். இந்த வகை மீன்கள் எதற்காக  அதிகம் பயன்படுகிறது, எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, எவ்வளவு விலை விற்கப்படுகிறது, என்பதைப் பற்றிய செய்தி தொகுப்பை காண்போம்.

மேலும் படிக்கவும் ...
    ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400-கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மன்னார் வளைகுடா பகுதி ஆழ்கடலில் மீன்பிடித்த போது இவர்களுக்கு அதிகளவில் பாறைக்குள் வாழும் முரல் வகை மீன்கள் சிக்கியுள்ளது. 

    95 செ.மீ வரை வளரக்கூடிய இந்த முரல் மீன் வளவளப்பாகவும், நீளமாகவும், வாய்முனை ஊசியாகவும், கரும்பச்சை நிறம் போல் இருக்கும், முதலை போல் கூரிய பற்கள் உடையது, சிறிய வகை மீன்களை வேட்டையாடி உண்டு வாழ்கின்றன இவ்வகை மீன்கள்

    முரல் மீன்கள் உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீனாகவும் அல்லது காயவைத்து கருவாடாகவும் பயன்படுத்தி உண்கின்றனர். இது வெளி மாநிலங்களை விட வெளி மாவட்டங்களுக்கு அதாவது விருதுநகர், சிவகங்கை, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அதிக அளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ரூ.30 முதல் ரூ. 40 வரையிலும் விற்க்கப்படுகிறது.

    செய்தியாளர் : பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி