முகப்பு /ராமநாதபுரம் /

விவசாய நிலத்தை ஆக்கிரமிக்குறாங்க... பட்டா கொடுங்க... ராமநாதபுர ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு

விவசாய நிலத்தை ஆக்கிரமிக்குறாங்க... பட்டா கொடுங்க... ராமநாதபுர ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு

X
மனு

மனு கொடுத்த மக்கள்

Ramanathapuram | விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வள்ளிமாடன் கிராமத்தில் விவசாயம் செய்து வந்த இடத்திற்கு பட்டா கேட்டு 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி அடுத்த குதக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வள்ளிமாடன் வலசை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு விவசாயம் செய்துகொள்ள அரசு சார்பில் 11 ஹெக்டரில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய அந்த இடத்தில் தற்போது வரையிலும் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து, அதற்கான வரிகள் செலுத்தி வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். ஆனால் நிலம் கொடுக்கப்பட்டதில் இருந்து அதற்கான பட்டா அப்பகுதி மக்களுக்கு வழங்கவில்லை.

இந்நிலையில், விவசாயம் செய்து வந்த இடம் உள்ள பகுதியின் அருகே அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சில நபர்கள் விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகள்: பக்தர்கள் அவதி - தீர்வு கிடைக்குமா

இதையடுத்து, வள்ளிமாடன் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து, விவசாயம் செய்ய அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிலர் தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram