முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு 

ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு 

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் விழிப

Ramanathapuram News : ராமநாதபுரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக வலைதளங்களில் நடக்கும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வை  சைபர் கிரைம் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக வலைதளங்களில் நடக்கும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வை சைபர் கிரைம் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் பண மோசடியில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும்‌ கோவில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகங்கள், கல்லூரிகள் போன்ற முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிபணத்தினை இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற புகார் தெரிவிக்க வேண்டும், தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர் சைபர் கிரைம் காவல்துறையினர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram