ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் சமையல் மஞ்சள் பறிமுதல் - சுங்கத்துறை அதிரடி

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் சமையல் மஞ்சள் பறிமுதல் - சுங்கத்துறை அதிரடி

பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்

Ramanathapuram | ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சமையல் மஞ்சளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த ஒன்றரை டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையிலிருந்து டாட்டா ஏசி வாகனம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சமையல் மஞ்சளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்து கொண்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்

இந்நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு டாடா ஏசி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

வேகமாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை மறைத்து சோதனை ஈடுபட்டபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி சமையல் மஞ்சள் கடத்தி வந்தது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்

இதையடுத்து, ஒன்ரை டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்து, வாகனத்தில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram