ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் சிக்கிய ஐஸ் போதை பொருள்.. ரூ.60 கோடி மதிப்பு - கடத்தல்காரர்களின் சதி முறியடிப்பு

ராமநாதபுரத்தில் சிக்கிய ஐஸ் போதை பொருள்.. ரூ.60 கோடி மதிப்பு - கடத்தல்காரர்களின் சதி முறியடிப்பு

X
பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கார்

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள்கள் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த  ரூ.60 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் சிக்கியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் கடத்தல்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேதாளை கடற்கரை வழியாக ஐஸ் போதைப்பொருள் கடத்த இருப்பதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வரையிலான சாலைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பரமக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் சென்னையில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது காரில் இருந்த சுமார் 60 கிலோ ஐஸ் போதை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதை பொருள்களை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் காரில் இருந்த இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 60 கோடி ரூபாயாக இருக்கலாம் என வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamil News