Home /ramanathapuram /

நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்- ராமநாதபுரத்தில் பரபரப்பு

நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்- ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் கவுன்சிலர்கள்

ராமநாதபுரம் கவுன்சிலர்கள்

ராமநாதபுரத்தில் நகராட்சி ஆணையாளருக்கு எதிராக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வார்டு கவுன்சிலர்கள், அவர்களுடைய வார்டு பகுதியிலுள்ள அடிப்படை வசதி பணிகளை செய்ய ஒப்புதல் அளிக்காமல் அலட்சியம் காட்டுவதாக நகராட்சி ஆணையாளரை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளில் பணிகள் செய்ய ஒப்புதல் அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வரும் ஆணையாளரை கண்டித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், ஆணையாளர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ராமேஸ்வரம் நகராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியது. பொது மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் மூன்று முறை கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம்


இதையடுத்து, அதற்கு நகராட்சி ஆணையாளர் மூர்த்தி முறையாக பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்காததால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் இதுவரையிலும் முதல் தீர்மானக் கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் கூட நிறைவேற்றபடவில்லை.

இந்நிலையில், ஆத்திரமடைந்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து நகராட்சி ஆணையாளரை மாற்ற வேண்டும். நகராட்சி பகுதிகளில் பணிகள் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த வட்டாசியர், கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நகராட்சி ஆணையாளர் மாற்றப்படுவார் என்றும் உங்களது கோரிக்கை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி