முகப்பு /ராமநாதபுரம் /

உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய சக காவலர்கள்..! ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி..

உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய சக காவலர்கள்..! ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி..

X
காவலரின்

காவலரின் குடும்பத்திற்கு நன்கொடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியாற்றி, மாரடைப்பால் உயிரிழந்த முதல்நிலை காவலர் சக காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய சம்பவம், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியாற்றி, மாரடைப்பால் உயிரிழந்த முதல்நிலை காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதி உதவி வழங்கிய சம்பவம், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல்நிலை காவலர் பாரதிதாசன் நுரையீரல் நீர்க்கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 2010ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பணியாற்றும் சககாவலர்கள் சார்பாக பாரதிதாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 210 ரூபாய் நிதியை நன்கொடையாக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் தங்கத்துரை வழங்கினார்.

Read More : புதுச்சேரியில் உடல் நலத்தை பெண்கள் பாதுகாத்திட விழிப்புணர்வு வாக்கத்தான்!

சக காவலர்கள் இணைந்து நிதி திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய இந்த நிகழ்ச்சி, ராமநாதபுரம் மாவட்டம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Ramanathapuram