ஹோம் /ராமநாதபுரம் /

கால்நடை நோய்களுக்கு மருந்துகள் இல்லாததை கண்டித்து சாயல்குடி கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள் ...

கால்நடை நோய்களுக்கு மருந்துகள் இல்லாததை கண்டித்து சாயல்குடி கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள் ...

X
கால்நடை

கால்நடை நோய்களுக்கு மருந்துகள் இல்லாததை கண்டித்து; கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு

Ramanathapuram veterinary Medicine shortage | பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் படுசாவு, அம்மை, மற்றும் சிறுமல் போன்ற பல்வேறு நோய்களுக்கு கால்நடை மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு இல்லாததால் தங்களது கால்நடைகள் உயிரிழப்பை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

சாயல்குடி கால்நடை மருத்துவமனையில் கால்நடைக்கு வரும் நோய்க்கு மருந்துகள் இல்லாததை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் மருத்துவமனை முற்றுகையிட்டனர்‌ போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திட்டங்குளம், ராசிகுளம், கருங்குளம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்த்து வருமானம் ஈட்டி வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தடுப்பூசி மற்றும் இதர மருந்துகளை வழங்க தவறுவதாகவும், இதனால் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு இறப்புகளை சந்திக்கின்றன‌.

கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று கால்நடைக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்துவரிடம் கூறி மருந்து கேட்டால், மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தற்போது இருப்பு இல்லை என தெரிவிப்பதால் கால்நடை உரிய சிகிச்சை இல்லாததால் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் படுசாவு, அம்மை, மற்றும் சிறுமல் போன்ற பல்வேறு நோய்களுக்கு கால்நடை மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு இல்லாததால் தங்களது கால்நடைகள் உயிரிழப்பை சந்திப்பதாக கூறி சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் அரசு கால்நடைமருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மேலும் கால்நடை மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்றும், தட்டுப்பாடு நிலவி வந்தால் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram