ஹோம் /ராமநாதபுரம் /

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.. பரமக்குடியில் எம்எல்ஏ தலைமையில் நடந்தது...

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.. பரமக்குடியில் எம்எல்ஏ தலைமையில் நடந்தது...

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Ramanathapuram District News : பரமக்குடியில் நகராட்சி வட்டாரப் பகுதிகளில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று தனியார் மஹாலில் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் மஹாலில் சமுக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் த சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பரமக்குடி வட்டாரங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் அவர்களது கணவர்களுடன் குங்குமம், சந்தனம் வைத்து தாம்பூலத்துடன், பூ,மாலை வைத்து வளையல் அணிவித்து ஏழு வகையான சாதம் கொடுத்து சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் சாலையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு... சிசிடிவி மூலம் மர்ம நபருக்கு வலை...

இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, நகர் மன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram