முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புகள்- போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புகள்- போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி

X
போராட்டத்தில்

போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Ramanathapuram | ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் ஆகம விதிகளை மீறி, தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்ய செல்லும் வழிகள் எல்லாம் பேரிகாட் தடுப்புகளை அமைத்தும் ஆகம விதிகளை மீறியும் பல இன்னல்களை ஏற்படுத்தும் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், ராஜகோபுரம் கிழக்கு வாசலில் உள்ள கோவில் பிரகாரங்களில் ஏற்படுத்தியுள்ள தடுப்புகளை அகற்றக்கோரியும், வழக்கம் போல் தடை இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்ககோரி அக்னி தீர்த்தம் கடற்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில் நிர்வாகத்திற்கும்‌, துணை ஆணையருக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram