ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளிஸ் பட்டைய கிளப்பும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் விற்பனை..

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளிஸ் பட்டைய கிளப்பும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் விற்பனை..

X
கிறிஸ்துமஸ்,

கிறிஸ்துமஸ், கேக் விற்பனை

Ramanathapuram Christmas Celebration : கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தயாராகும் கேக்குகள், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளதால் மகிழ்ச்சி உரிமையாளர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஒவ்வொரு வருடத்தின் இறுதி பண்டிகையாக வருவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. ஒரு ஆண்டின் முதல் பண்டிகையாக வருவதான் புத்தாண்டு பண்டிகை இவை இரண்டும் மக்களால் கேக் வெட்டி, அனைவருக்கும் கொடுத்து அன்பு பரிமாறிக்கொள்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை தான் கிறிஸ்துமஸ், இந்நாளில் இயேசு கிறிஸ்து அவதரித்த தினமாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் இறுதி பண்டிகையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதிகளில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர், தேவாலயங்களும் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் அனைத்திலும் நட்சத்திர விளக்குகள் ஏற்றப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட துவங்கி விட்டனர்.

இதையும் படிங்க : பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

இந்நிலையில், தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் ஜஸ்வர்யம் பேக்கரியில் கடந்த ஒரு வாரமாக நாளைக்கு 60 கிலோ வரையிலும் கேக் ஆர்டர் வந்துள்ளதாக உரிமையாளர் கூறுகிறார். கடந்த இரண்டு வருடங்களும் கொரோனா வின் கெடுபிடியால் வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும், இந்த வருடம் வியாபாரம் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிளம்கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், மேங்கோ பிளேவர், ரசமில்லா கேக், ரெட்வெல்வெட் கேக், ரெயின்போ கேக், பிரௌனி கேக் ஆகிய வகை கேக்குகள் அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளது‌. பிளம் கேக்குகளை கிறிஸ்துமஸ் தினத்தன்று மற்றவர்களுக்கு கொடுத்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

மேலும் 60க்கும் மேற்பட்ட கேக் வகைகள் செய்து கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் பண்டிகையை கொண்டாட அசத்தி வருகின்றனர் ஜஸ்வர்யம் பேக்கரியினர். இங்கு இதுவரையில் 600-கிலோவிற்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் கேக்குகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏராளமானோர் கேக்குகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர், மேலும், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து தரமானதாகவும், சுவையானதாகவும் கேக்குகள் வாங்கி பண்டிகையை கொண்டாடுங்கள்.

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram