ராமேஸ்வரத்தில் 47வது அறிவைத்தேடும் நடைபயணம் நிறைவு விழா பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து கடந்த 21 ஆம் தேதி தானம் அறக்கட்டளை சார்பில் 15 கிராம் சென்று இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளின் அனுபவங்களை பதிர்வு செய்தல், பாரம்பரிய பயிர் ரகங்கள் பல்லூயிர் பன்மயம் பாதுக்க சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிவை பகிர்தல், உள்ளுர் பிரச்சனையை தீர்வு கானும் எண்ணம் கொண்ட நபர்களை சந்தித்து யோசனைகளை தெரிந்து கொள்ளும் போன்றவற்றை அறியும் விதமாக 47 வது அறிவைத்தேடும் நடைபயணம் தொடங்கி ராமேஸ்வரத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பேக்கரும்பு கிராம மக்கள் தங்களது பழைய முறைப்படியான உணவுகளை காட்சிப்படுத்தினார், மற்றும் தானம் அறக்கட்டளையில் உள்ள நிர்வாகிகளும் அவர்களது கிராமங்களில் உள்ள பழமையான உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குஜராத் ஹாரியான கர்நாடக மகராஷ்டிரா ஆகிய மாநிலத்தை சேர்ந்த 53 பேர் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.
இதில் பிரிஸ்டி அறக்கட்டளை நிர்வாகிகள் அனில் குப்தா தலைமை தாங்கினார்.தான் அறக்கட்டளை வாசிமலை முன்னிலை வகித்தார்.மதுரை சேவா அறக்கட்டளை நிர்வாகி விவேகானந்தன் சிறப்புரையாற்றினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.