ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் நாய் கடித்து குதறியதால் உயிருக்கு போராடிய புள்ளிமான்... பொதுமக்கள் மீட்டு சிகிச்சை...

பரமக்குடியில் நாய் கடித்து குதறியதால் உயிருக்கு போராடிய புள்ளிமான்... பொதுமக்கள் மீட்டு சிகிச்சை...

புள்ளிமான் மீட்பு

புள்ளிமான் மீட்பு

Paramakudi | இந்த மான்கள் வனப்பகுதிக்குள் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கமான ஒன்று தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றின் தென்கரையில் நாய் கடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புள்ளிமானை, பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரமக்குடி அருகே சூரியூர், அண்டக்குடி, நயினார்கோவில், வாணியவல்லம், கீழப்பெருங்கரை, உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியாகும், இப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன.

இந்த மான்கள் வனப்பகுதிக்குள் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கமான ஒன்று தான்.

இதையும் படிங்க : ‘மிஸ்டர் ராம்நாடு’ ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? - வெற்றியாளர்கள் விவரம்!

இந்நிலையில், பரமக்குடியில் வைகை ஆற்றின் தென்கரையில் நாய்கள் கடித்து அடிப்பட்ட நிலையில், மூன்று வயதுமிக்க பெண் புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதிகள் உயிருக்கு போராடிய நிலையில் வந்துள்ளது.

இதனை பார்த்து மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த மானை மீட்டு ஆட்டோவில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, வனத்துறையினரின் வருகையை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் உடனடியாக உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததை பலரும் வெகுவாக பாராட்டினர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad