முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்..

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

Rameswaram Temple : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி – அம்பாள் 2 திருத்தேரில் 4 ரத வீதிகளிலும் ஊர்வலமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

உலக பிரசித்தி பெற்றதும், காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலம் மற்றும் தீர்த்த மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், ஆடி திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா கடந்த 11ம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் 10 நாட்களும் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும்சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுவீதி உலா நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி ரதத்தேரில் இரவு 10 மணிக்கு மேல் 4 ரத வீதிகளிலும் சுவாமி, அம்பாள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ராமநாதசாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, 9ம் நாளில் ராமநாதசுவாமி‌ – பர்வதவர்த்தினி அம்பாள் 2 திருத்தேர்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் ஊர்வலமாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி அம்பாளின் திருத்தேரினை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். பின்பு கிழக்கு கோபுர வாசலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram