ஹோம் /ராமநாதபுரம் /

தேவர் ஜெயந்தி - ராமநாதபுரம் பஸ் போக்குவரத்தில் மாற்றம்

தேவர் ஜெயந்தி - ராமநாதபுரம் பஸ் போக்குவரத்தில் மாற்றம்

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

Thevar Jayanthi | ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர்  ஜெயந்தி விழா நடைபெறும் நிலையில், பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் வரும் ஞாயிற்று கிழமை (அக்டோபர் 30ஆம் தேதி) பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம்-மதுரை பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 30ல் கமுதி, முதுகுளத்துார், பார்த்திபனுார், பரமக்குடி பகுதிகளில் டவுன் பஸ்கள் ஓடாது. 29, 30 ஆகிய தேரிகளில் மதுரை, திருச்சி ஆகிய வெளியூர் பேருந்துகள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோயில், கைகாட்டி, ஆர்.எஸ்.மங்கலம் வழியாக ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும்.

Must Read : 10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

மானாமதுரை, பார்த்திபனுார், பரமக்குடி, தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிச்சீட்டு வைத்துள்ள வாகனங்கள் மட்டுமே பரமக்குடி செல்ல அனுமதிக்கப்படும். இதே போல, ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை, ஏர்வாடி வரை பேருந்துகள் இயக்கப்படும். அங்கிருந்தும் ராமேஸ்வரம், ராமநாதபுரத்திற்கு வருவதற்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மதுபான கடைகள் அக்டோபர் 27 முதல் 30 வரை 4 நாட்கள் மூட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Muthuramalinga Thevar, Ramanathapuram, Thevar Jayanthi