ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

RamanathaPuram District | எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிட்டி சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிட்டி சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்த இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேர விரும்புவோர்கள் கீழ்காணும் அழைபேசி எண்களை தொடர்பு கொண்டு இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவி தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா - ராமநாதபுரம்  கலெக்டர் முக்கிய தகவல்

இளங்கலை பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இப்போட்டி தோ்வுகளுக்கு வரும் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டி தோ்வுக்கு இலவச பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram