ஹோம் /ராமநாதபுரம் /

முதியவர்களுடன் உலக முதியோர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்..! ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம்..!

முதியவர்களுடன் உலக முதியோர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்..! ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம்..!

பார்த்திபனூர்

பார்த்திபனூர் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாட்டம் - மாவட்ட ஆட்சிய

இதில் 100-க்கும்‌ மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து நலத்திட்ட உதவிகளை பெற்றுச்சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Tamil Nadu

உலக முதியோர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் முதியோர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உலகம்‌ முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலக முதியோர் தினமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு அங்கிருந்த முதியோர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

ALSO READ | நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய நாட்டுப்படகு.. சூறைகாற்றால் சேதம்..! 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

இதையடுத்து, முதியோர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இயற்கை வளம், தண்ணீர் பஞ்சம், முதியோர்களை மீட்டெடுத்து குடும்பத்தில் அல்லது காப்பகத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து சிறுவர், சிறுமிகளின் விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் 100-க்கும்‌ மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து நலத்திட்ட உதவிகளை பெற்றுச்சென்றனர். பின்பு கலைநிகழ்ச்சிகள் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Published by:Anupriyam K
First published:

Tags: District collectors, Orphanage, Ramanathapuram, Ramnad