முகப்பு /ராமநாதபுரம் /

சிசிடிவி கேமரா இருந்தும் வேஸ்ட்.. ராமேஸ்வரத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு..

சிசிடிவி கேமரா இருந்தும் வேஸ்ட்.. ராமேஸ்வரத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு..

X
மாதிரி

மாதிரி படம்

CCTV Camera : ராமேஸ்வரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில்லாததால் குற்றசம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்யவும், புனித நீராடவும் செல்கின்றனர்.

இந்த வாகன நிறுத்துமிடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் பராமரிப்பு இன்றியும், பயன்பாடு இன்றியும் எந்தவொரு பயனும் இல்லாமல் உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட‌ கஞ்சா கடத்தல்காரர்கள் சொகுசு காரில் 150 கிலோ கஞ்சாவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர்.

பயன்பாடில்லாத சிசிடிவி கேமரா

இங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாததால் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையினர் திணறினர். இப்படிப்பட்ட சூழலில், நூற்றுக்கணக்கான நபர்கள் வரக்கூடிய இடத்தில் வாகனங்களை ஒருவர் திருடிச்சென்றாலோ, வாகனங்களுக்குள் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்றாலோ எப்படி கண்டறிவது என‌ பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, இனிவரும் நாட்களில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிசிடிவி கேமராக்களை பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் பக்தர்கள் சார்பாக வலியுறுத்துகின்றனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Rameshwaram