ராமநாதபுரம் புத்தேந்தல் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகள் பெரும்பாலும் வெட்டவெளியிலேயே இருக்கின்றன. இதனால் இவை எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், வைரஸால் பரவும் ஒருவகை தொற்றுநோயாகும். இந்த வைரஸ் கிருமிகள் நீண்ட தொலைவுக்கு காற்றின் வழியாக பரவும் தன்மை கொண்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்க்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாமுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளை தாக்கும் வாய்காணை மற்றும் கால்காணை நோய் தொற்றை தடுப்பதற்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அதற்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் மார்ச் 21ஆம் தேதி வரையில் 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 25 மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். விடுபடும் கால்நடைகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Vaccination