முகப்பு /ராமநாதபுரம் /

Ramanathapuram | ஆட்டோ மீது கார் மோதி விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர்‌ உயிரிழப்பு

Ramanathapuram | ஆட்டோ மீது கார் மோதி விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர்‌ உயிரிழப்பு

X
உயிரிழந்தவர்களின்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

Ramanathapuram | ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை, தாய் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளையைச் சேர்ந்த இளம்பெண் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக நான்கு நாட்களுக்கு முன்பு சேர்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தைப் பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து குழந்தையை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேதாளையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து, பெருங்குளம் அருகே உள்ள நதிப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

உடனடியாக அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வரவைத்து நான்கு நபர்களையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி குழந்தையும், தாயும், ஆட்டோ ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமேஸ்வரம் கோவிலில் மாசி அமாவாசை தீர்த்தவாரி உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

இதுகுறித்து, உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram